புலம்பெயர் தொழிலாளர்கள் தமது நாட்டுக்கு பணம் அனுப்புவதற்கு வரி அறவிடப் போவதாக மத்திய கிழக்கு நாடுகள் தீர்மானித்துள்ள போதிலும் சவுதி அரேபியா எவ்வித வரி அறவீடும் செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.
சவுதி அரேபியா சர்வேச கொள்கைகளுக்கமைவாக இவ்வரி அறவீடு செய்யப்போவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஜிடிஎன் ஒன்லைன் செய்தி வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.