சாரதி அனுமதிபத்திரம் பெறுவது தானியங்கி முறையில் பெறும் வசதிகளை டுபாய் ஏற்படுத்தியுள்ளது.
இனிவரும் காலங்களில் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு முன்னர் வாகனம் ஓட்டும் திறனை பரிசோதிக்க மனிதர்கள் இருக்கமாட்டார்கள் என்றும் இயந்திரங்களின் கண்காணிப்பின் மூலமே பரிசோதிக்கப்படும் என்றும் டுபாய் வீதி மற்றும் போக்குவரத்து அதிகாரசபை நேற்று (23) அறிவித்துள்ளது.
ஸ்மார்யார்ட் திட்டத்தினூடாக இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கமராக்கள், தொடுதிறன் இயந்திரங்களினூடாக எழுத்துமூல மற்றும் செயற்றிறன் பரீட்சைகள் பரிசோதிக்கப்பட்டு தானியங்கி முறையில் அனுமதி வழங்கப்படவுள்ளது.
இம்முறையானது, மனித வலுவைப் பயன்படுத்தாமல், வௌிப்படைத்தன்மை மற்றும் பிழைகளை நுண்ணிய முறையில் கண்டறிய உதவும் என்று அந்நாட்டு சாரதி பயிற்சி மற்றும் தகைமைத் திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.