நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் பொறியியல் டிப்ளோமாதாரிகளின் போராட்டம் இன்று (10) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமது சேவைத்தரம் குறைக்கப்பட்டமை மற்றும் வரப்பிரசாரங்கள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் பொறியியல் டிப்ளோமாதாரிகள், நேற்று முன்தினம் (08) போராட்டத்தை ஆரம்பித்தனர்.
தமது பதவியை தரம் குறைப்பு செய்வதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாட்டினால் தாம் பாதிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் பொறியியல் டிப்ளோமாதாரிகளின் சங்கம் தெரிவித்தது.
அத்துடன், மேலதிக சேவை நேரம் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்குத் தொடர்பில்லாத பணிகளில் பணியாற்ற முடியாது என்று தெரிவித்தும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் பொறியியல் டிப்ளோமாதாரிகளின் சங்கத் தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்.
எனினும், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், நீர் வழங்கல் பணிகள் எந்த விதத்திலும் பாதிப்படையவில்லை என தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் தெரிவித்தார்.