மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்று காணாமல் போன இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள மக்கள் உதவி கோரப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா மற்றும் லெபனான் நாடுகளுக்கு சென்று தற்போது வரையில் எவ்வித தகவல்களும் இல்லாத நபர்கள் தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள் பணியகத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தகவல் ஆராய்ந்து பார்ப்பது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கடமையாகும்.
சவுதி அரேபியா மற்றும் லெபனானில் வேலைவாய்ப்புக்காக சென்றவர்களின் தகவல் தெரியும் என்றால் பணியகத்தின் வெளிநாட்டு தொடர்பு பிரிவின் 011 4379328 / 011 2864136 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு தகவல் இல்லாத ஐவர் தொடர்பில் பணியகத்தினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
1. எம்.எம்.எம்.பாத்திமா, 575/ குடாகம 8, புதிய நகரம், வீரவில என்ற பெயர் விலாசத்தையுடைய பெண் 2014ஆம் ஆண்டு 02 மாதம் 28ஆம் திகதி வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
2. ஐ.கே.இத்திரானி, அகதி முகாம், மூத்தூர் என்ற விலாசத்தை சேர்ந்த பெண் 2008ஆம் ஆண்டு 11ஆம் திகதி வெளிநாடு சென்றுள்ளார். 2009ஆம் ஆண்டு முதல் அவர் தொடர்பில் தகவல் இல்லை.
3. எஸ்.மங்களேஷ்வரி, 190 மடுகரை, மன்னார் என்ற விலாசத்தை சேர்ந்த பெண் 2007ஆம் ஆண்டு 09ஆம் மாதம் 4ஆம் திகதி அவர் வெளிநாடு சென்றுள்ளார்.
4. ஓ.ஏல்.வஜித், 330 சம்மாந்துறை என்ற விலாசத்தை சேர்ந்த ஆண்டு 2006 ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 16ஆம் திகதி வெளிநாடு சென்றுள்ளார்.
5.எம்.சந்திரலத்தா, மகா பில்லேவ தத்திரிமலை என்ற விலாசத்தை சேர்ந்த பெண் வெளிநாடு சென்ற திகதி தெரியவரவில்லை எனினும், கடந்த 15 வருடங்களாக இவர் தொடர்பில் தகவல் இல்லை என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.