சவுதி அரேபியாவுக்கான இலங்கை தொழில்வாய்ப்பு அலுவலகங்கள் தமது கட்டணங்களை 92 வீதமாக அதிகரித்துள்ளன என்று சவுதி அரேபிய வர்த்மானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் இருந்த வீட்டுப் பணிப்பெண்களை அனுப்புவதற்கான கட்டணம் $1,560 அமெரிக்க டொலரிலிருந்து3,000 அமெரிக்க டொலராக கட்டணம் அதிகரிக்கப்பட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண வர்த்தக சம்மேளன மற்றும் கைத்தொழில் வேலைவாய்ப்பு குழுவின் தலைவரும் ஹுசைன் அல் முதைரியை மேற்கோள்காட்டி சவுதி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கை அனுமதிக்கப்படும் வரையில் இலங்கை வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை நிறுத்தி அழுத்தம் வழங்கி வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பணிப்பெண்களின் சம்பளத்தை 100 சவுதி ரியாலில் இருந்து 300 சவுதி ரியாலாக அதிகரிக்குமாறு கோரி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததாகவும் இவ்வதிகரிப்பு பெப்ரவரி மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினால் அதிகரிக்கப்பட்டுள்ள கட்டணங்களுக்கமைய, இலங்கை வேலைவாய்ப்பு முகவர்கள் சவுதியில் உள்ள அவர்களுடைய ஒப்பந்தக்காரர்ககளை புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுமாறு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
நாட்டிற்கு பணிப்பெண்களை கொண்டுவருவதில் உள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்கு, குறித்த ஒப்பந்ததை சில சவுதி முகவர் நிலையங்கள் அனுமதித்துள்ளதாக அந்நாட்டு தொழிற்சந்தை விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 3000 அமெரிக்கு குறைவான கட்டணத்தில் பணிப்பெண்களை இணைக்க முயலும் ஒப்பந்தங்களை தவிர்ப்பது என இலங்கையிலுள்ள 300 முகவர் நிலையங்களுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
-SG -Agencies