பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ஒப்பந்த அடிப்படை பணியாளர்களுக்கு ரயில்வே எச்சரிக்கை

இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ரயில்வேயின் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பணிவிலக்கல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு வெளியிட்டு, பல்வேறு தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடாலாவியரீதியில் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணிவரை 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை ரயில்வே சாரதிகள் மற்றும் பாதுகாவலர்கள் மேற்கொள்கின்றனர்.

இதனையடுத்து, இன்று பணிகளுக்கு வராத ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றும் ரயில்வே சாரதிகள் மற்றும் பாதுகாவலர்கள் பணிகளில் இருந்து தாமாகவே விலகியதாக கருதப்படுவர் என ரயில்வே திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435