கட்டாரில் இருந்து பயணிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணமாற்றம் செய்ய முடியாமையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள வங்கிகள் கட்டார் ரியால்களை இலங்கை ரூபாவாக மாற்றித்தர மறுப்பதாகவும் இதனால் தாம் கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் பயணிகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கின் சில நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்தன.
தீவிரவாதத்திற்கு கட்டார் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டியே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
இதனையடுத்து, அந்தநாட்டுக்கான விமான சேவைகளை இடைநிறுத்துவதாக எமிரேட், பிளை துபாய், எதிஹாத் எயார்லைன்ஸ் ஆகியன அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி- அத தெரண/ வேலைத்தளம்