வெளிநாட்டு பணிகளுக்கு தகுதியானவர்கள் மிகக் குறைவு

வெளிநாட்டு பணிகளுக்கு தகுதியான பணியாளர்களை தேடுவதில் பாரிய பிரச்சினை உள்ளதாக வெளிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

வேலைவாய்பபை தேடிக் கொள்வதில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் பிரச்சினை இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறந்த தொழில் வாய்ப்புகளுகள் கிடைத்தபோதும், அதற்குத் தகுதியான பணியாளர்களை தேடிக்கொள்ள முடியாத சந்தர்ப்பம் தொடர்பில் தமது அமைச்சுக்கு போதுமான அளவு அனுபவம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில், அமெரிக்காவால் ஐந்தாயிரம் தாதியர்கள் இலங்கையிலிருந்து கோரப்பட்டனர்.

இதற்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் பங்குபற்றிய ஆயிரக்கணக்கானோர்களுள், தகுதியுடையவர்களாக மூன்று பேர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டனர் எனஅமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இந்த நேர்முகப் பரீட்சையில் பங்குபற்றிய ஆயிரக்கணக்கானோருள், 80 பேர் தெரிவுசெய்யப்பட்டு, பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

எனினும், இறுதியில் தகைமைகளை பூர்த்தி செய்து இறுதிப் பரீட்சைக்கு மூன்றுபேர் மாத்திரமே தோற்றினர் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள விளக்கமளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435