வருடாந்தம் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வதாகவும், அவர்களில் 90 சதவீதமானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே செல்வதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே தகவல் வெளியிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியார்களில் 2 முதல் 3 சதவீதானோர்களே எதிர்மறையான நிலைமைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். 97 சதவீதமானோர் தமது பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்கின்றனர்.
எனினும், துரதிருஷ்டவசமாக எதிர்மறையான சம்பவங்கள் மட்டுமே ஊடகங்களில் பிரசித்தமாகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களின் ஆகக்குறைந்த மாதாந்த அடிப்படை சம்பளமானது 300 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. அதனை 350 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பெரும்பாலான வெளிநாட்டுப் பணியாளர்கள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்டுள்ளனர். குடும்பங்களின் நிலைமை மேலோங்கியுள்ளது. வீடுகளை கட்டியுள்ளனர். பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குகின்றனர். இவ்வாறான வெற்றிகரமான விடயங்களும் வெளிநாடுகளில் ணியாற்றும் இலங்கை பணியாளர்களின் பின்னணியில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், வெளிநாட்டு பேணியாளர்களின் தொழில்நிலை மற்றும் திறைமைகளை மேம்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார்.