வௌிநாட்டு தொழிலாளர் பாதுகாப்பு கருதி கட்டாரின் புதிய ஒப்பந்தங்கள்

வௌிநாட்டு தொழிலாளர்களுடைய பாதுகாப்பு மன்றும் நன்மை கருதி புதிய ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களை மேற்கொள்ள கட்டார் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வௌிநாட்டு தொழிலாளர்கள் பணிபுரிய சிறந்த நாடாக தமது நாட்டை மாற்றியமைக்கும் நோக்கில் கட்டார் அரசு இப்புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளது.

அதற்கமைய, பிரதான 5 விடயங்கள் தொடர்பில் குறித்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் வௌிநாட்டு தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, தொழில் தரத்தை மேம்படுத்தல், சிறந்த தொழில் ஒப்பந்த முறையை அறிமுகப்படுத்தல், சட்ட திட்டங்களை உருவாக்குதல், தொழில் வழங்குநர்களின் சுரண்டல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், ஆட்கடத்தல் வியாபாரத்தை தடுத்து நிறுத்தல் மற்றும் குறிப்பாக தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்தல் மற்றும் அவர்களுக்காக செயற்படுத்தல் போன்ற முக்கிய விடயங்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

எதிர்காலத்தில் கட்டார் நாட்டுக்கு தொழில்வாய்ப்பை பெற்று செல்ல எதிர்பார்த்துள்ள மற்றும் தற்போது பணியாற்றும் இலங்கையர்களுக்கு இது ஒரு நற்செய்தியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435