மலேசியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்து தொழில் புரியும் இலங்கையர்கள், சட்டரீதியாக தங்களை பதிவு செய்துக் கொள்ள அந்நாட்டு அரசாங்கம் வாய்ப்பளித்துள்ளது.
மலேசிய உள்துறை அமைச்சின் வெளிநாட்டு தொழிலாளர்கள் செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
மலேசியாவில் 4 இலட்சம் முதல் 6 இலட்சம் வரையான வெளிநாட்டு பணியாளர்களை ஒப்பந்தம் செய்யும் இலக்கு ஒன்று முன்கொண்டுச் செல்லப்படுகிறது.
ஆனால் இந்த எண்ணிக்கையான வெளிநாட்டுப் பணியாளர்கள் அங்கு பதிவுப் பெறாத நிலையில், சட்டவிரோதமாக பணியாற்றுகின்றவர்களையும் பதிவு செய்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு தங்களைப் பதிந்துக் கொண்டு சட்டரீதியான பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற மின்அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.