எதிர்வரும் திங்கட் கிழமை (18) ஆம் திகதி வரை கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அபுதாபி தேசிய வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
இன்று (16) அதிகாலை தொடக்கம் அபுதாபியில் வடமேற்காக கடுமையான காற்று வீச ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள வானிலை அவதான நிலையம் எதிர்வரும் திங்கட் கிழமை வரை அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இக்காற்றானது கடுமையான தூசையும் மணலையும் அள்ளி வீசுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றமையினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் சாத்தியங்கள் காணப்படலாம் என்று தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம் வரலாறு காணாத வகையில் நாட்டில் வெப்பநிலை குறைவடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
அராபிய வலைக்குடா கடலில் கடலலைகளின் வேகம் கடுமையாகலாம் என்றும் ஓமான் கடற்பகுதியிலும் சற்று அதிகமாக கடல் அலைகள் எழும்பலாம் என்றும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.