தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
தென் கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான பொது மன்னிப்புக் காலத்தை கடந்த மாதம் தென் கொரியா வழங்கியிருந்தது. இக்காலப்பகுதியில் நாடு திரும்ப முன்வருவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படாது என்று தென்கொரியா அறிவிருத்திருந்தது.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 10ம் திகதி வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் 10ம் திகதியுடன் நிறைவடையவுள்ளமையினால் இச்சந்தர்ப்பத்தை உடனடியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெளியேறுவதற்கான பொதுமன்னிப்புக் காலம் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனைத் தெரிவித்துள்ளது.