வௌிநாடுகளுக்கு பயிற்சி பெற்றவர்களை தொழிலுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டம் வெற்றியடைந்துள்ளதாக நீதி மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளுக்கமைய இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் பெண்களை விட ஆண்கள் வௌிநாடு செல்லும் எண்ணிக்கை 34.1% வீதமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வௌிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதனூடாக நாட்டின் அந்நிய செலாவணியை மேம்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கமைய, இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் 141.725 பேர் வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாடி சென்றுள்ளனர். அவர்களில் 48, 374 பேர் மட்டுமே பெண்கள். மிகுதி 93,351 பேரும் ஆண்கள். அவர்களில் 42389 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள். ஊவா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 3,994 பேரே வௌிநாட்டுக்கு சென்றுள்ளனர்.
அதிகமானவர்கள் கட்டார் நாட்டுக்கு சென்றுள்ளனர். வீட்டுப் பணிப்பெண்களாக 37,002 பேர் சென்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.