COVID 19 தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சித்து பார்ததில் வெற்றியடைந்துள்ளதாகவும் ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) அறிவித்துள்ளது.
அபுதாபியில் ஸ்டெம்ஸ் செல்ஸ் சிகிச்சை வழங்கும் ஸ்டெம்ஸ் செல்ஸ் சென்ரர் என்ற நிறுவனம் குறித்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. நோயாளிகளின் இரத்தத்தில் இருந்த எடுக்கப்பட்ட ஸ்டெம்ஸ் செல்ஸ்களைக் கொண்டே இம்மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக குறித்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருந்து கண்டுபிடிப்புக்கான காப்புரிமை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இம்மருந்தை கண்டுபிடிப்பதற்காக உழைத்த அனைத்து வைத்தியர்கள், ஆய்வார்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு அந்நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.