அம்பன்பொல, அடவரள பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட கே.ஜீ குசுமாவதி என்பவதே 17 வருட சம்பளத்துடன் நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 2000மாம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 23ம் திகதி வீட்டுப்பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவுக்கு சென்ற அவர் நகருக்கு வெகு தொலைவில் பாலைவனப்பிரதேசத்தில் பணியாற்றியுள்ளார். 15 வருடங்களாக ஆடுகள் மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கே.ஜீ. குசுமாவதி சில மாதங்களுக்கு ஒரு தடவை தொலைபேசியூடாக வீட்டுக்கு கதைத்துள்ளார். அதன் பின்னர் கடந்த ஒன்றரை வருட காலமாக வீட்டுக்கு எந்த தொடர்பையும் அவர் மேற்கொள்ளவில்லை.
இதனையடுத்து குடும்பத்தினர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முறைப்பாடு செய்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த நீதி மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள குசுமாவதியை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு சவுதி தூதரகத்தின் தொழில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
வௌிநாட்டில் தொழில்நாடி சென்ற இலங்கையர் ஒருவர் பெற்ற மிக அதிக தொகையான சம்பளம் இதுவாகும் என்று அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
news.lk/ வேலைத்தளம்