விற்பனை நிலையங்களில் புகைத்தல் மற்றும் இ – சிகரட்டுக்களை பயன்படுத்தினால் 2,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று டுபாய் நகரசபை அறிவித்துள்ளது.
நாட்டில் இலக்ட்ரோனிக் சிகரட்டுக்களை பயன்படுத்துவதும் இறக்குமதி செய்வதும் டுபாய் சட்டத்திற்கமைய சட்டவிரோதமானது என்று அந்நாட்டு பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைவர் ரெதா சல்மான் தெரிவித்துள்ளார்.
,லத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை நிலையங்கள் போன்ற பொது இடங்கள், அவற்றின் வாயில்களில் பயன்படுத்தவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விற்பனை நிலையங்களுக்கு உள்ளே இ – சிகரட்டுக்களை பயன்படுத்துபவர்கள் மற்றும் புகையிலைசார் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பது தொடர்பில் கண்காணிக்கும் பணிகள் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனை மீறும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மூடப்பட்ட இடங்களில் புகைத்தாலும் விதிகளை மீற அனுமதி வழங்கப்படாது.
இச்சட்டமானது கடந்த 2009ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அதற்கமைய ஹோட்டல்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் போன்ற பொது இடங்களில் மற்றும் அதன் வாயில்களில் புகைத்தல் மற்றும் இ – சிகரட்டுக்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது.
,துதவிர புகைத்தல் பொருட்கள் தொடர்பில் நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்கள் செய்வது சட்டமூலம் 8 இற்கமைய தடை செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் சுகாதாரம் தொடர்பான மூலோபாய கொள்கைகளை அடையும் நோக்கில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் பொது அறிவித்தல் வழங்கப்பட்டதையடுத்தே அபராதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரெதா சல்மான் தெரிவித்துள்ளார்.