சவுதி அரேபியாவின் மக்கா உட்பட பல பிரதேசங்களில் புழுதிப் புயலின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் அனைவரையும் அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு வானிலை அவதானநிலையம் எச்சரித்துள்ளது.
அண்மைக்காலமாக சவுதியில் பல்வேறு பிரதேசங்களில் மணல் சூறாவளி ஏற்பட்டு வருவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திப் பத்திரிகையான சவுதி நியுஸ் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சவுதி அரேபிய வானிலை மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரித்துள்ளது.
இந்நிலை காரணமாக மக்கா மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பன மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் வெளியில் செல்லும் போது பாதுகாப்பான நடைமுறைகளை கையாளுமாறும் கோரப்படுகின்றனர்.