
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் அனைத்து பணியாளர்களுக்கும் ஆங்கில மொழி அறிவு கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை பணியாளர்களுக்கு கூடுதல் பெறுமதி சேர்ப்பதற்காக ஆங்கில மொழி அறிவு கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன் ஊடாக பணியாளர்களுக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
பல்வேறு நாடுகளுக்கு மேலும் பல இலங்கை பணியாளர்களை அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
அதன் ஊடாக நாட்டுக்கு பாரியளளவிலான அந்நிய செலாவணிகளை பெற்றுக் கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.