
பொது இடங்களில் சிகரட் துண்டுகளை வீசுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று டுபாய் மாநகரசபை அறிவித்துள்ளது.
உள்ளூர் சட்டம் இல 11 2003 இற்கு அமைய பயன்படுத்திய சிகரட்டுக்களின் மிகுதியை வீதியில் போடுவோருக்கு 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகள், பூங்காக்கள், மைதானங்கள் போன்ற பொதுவிடங்களில் சிகரட் துண்டுகளை வீசுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. பயன்படுத்திய சிகரட் துண்டை கவனயீனமாக வீசியெறிந்ததில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை கவனத்திற்கொண்டு சுற்றுப்புறச்சூழலை தூய்மையாக வைத்திருக்கும் நோக்கில் இப்புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.