வார இறுதியில் மோசமான காலநிலை நிலவும் சாத்தியம் உள்ளமையினால் பாதுகாப்பாக வாகனம் செலுத்துமாறு ஐக்கிய அரபு இராச்சிய தேசிய வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக ஆயிரம் மீற்றர் தூரத்திற்கு பனிமூட்டம் காணப்படும் என்றும் கடுமையான காற்று மற்றும் மணற்புயல் வீசும் சாத்தியம் காணப்படுவதாகவும் நாட்டில் பல பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை அவதானநிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் இரவு மற்றும் காலை வேளையில் ஈரழிப்பான காலநிலை காணப்படலாம். கடுமையான காற்று வீசும் சந்தர்ப்பங்களில் துசு மற்றும் மணல் காரணமாக பாதைகள் தௌிவாக தெரிய முடியாதிருக்கக்கூடும் என்பதால் மோட்டார் வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அரபிக்கடல் மற்றும் ஓமான் கடலில் அலைகளின் வேகமும் வழமைக்கு மாறாக அதிகமாக இருக்கக்கூடும். அரபிக் கடலில் அலைகள் 4-7 அடிகள் வரையும் ஓமான் கடலில் 3-6 அடிகள் வரையும் கடல் அலைகள் எழக்கூடும். எனவே வார இறுதியில் கடலுக்கு செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.