அராபிய வலைக்குடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடுங்காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய அரபு இராச்சிய தேசிய வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக இன்றைய தினம் (20) அதிகாலை 4 மணி வரை 8 அடிகள் வரை அலைகள் உயரே எழும் என்றும் பின்னர் படிப்படியாக குறைந்து 4-6 அடிகள் வரை எழும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் கரையோர பிரதேசங்கள் உட்பட பல பிரதேசங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவு வேளையில் பனி மூட்டமாக காணப்படும் என்றும் தேசிய வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை வேளையில் அல் அயினிலுள்ள கலீபா கல்லூரி பிரதேசம், அல் அயின் சர்வதேச விமான நிலையம் மற்றும் தாஸ் அல் கைமா சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மிஹாட் போன்ற பகுதிகளில் பனிமூட்டமாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.