உதவி சுங்க அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 68 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (24) நிதியமைச்சில் நடைபெற்றது.
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நியமனக் கடிதங்ளை தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கினார்.
திறந்த போட்டிப் பரீட்சையினூடாக தோற்றிய 10,000 பேரில் அதிகூடிய புள்ளி அடிப்படையில் 227 பேர் சித்தியடைந்திருந்தனர். அவர்களுள் நேர்முகத் தேர்வு மூலம் உதவி சுங்க அதிகாரிகளாக தெரிவுசெய்யப்பட்ட வர்களுக்கே இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் பி.எம்.எஸ்.சார்ள்ஸும் கலந்துகொண்டார்.