UAEயில் பணியாற்றுவோர் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை

நாட்டில் பணியாற்றும் வௌிநாட்டு பணியாளர்களுடைய உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான கையேட்டை ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம் முதல்தடவையாக வௌியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களுடைய உரிமைகள், கடமைகள் மற்றும் சட்டம் உள்ளடங்கியதாக இக்கையேடானது அவை தொடர்பான வன்முறைகளையும் தடுக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த கையேடானது உருது, அரபி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வௌியிடப்பட்டுள்ளதாக உள் மற்றும் வௌிவிவகாரங்களுக்கான பொது இயக்குநர் பணிமனையின் பிரதிப்பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஒபைட் மொஹைர் பின் சுரோர் தெரிவித்துள்ளார்.

இக்கையேடானது டுபாயில் பணியாற்றும் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளதுடன் தமது வௌிநாட்டு வாழ்க்கையை சட்ட திட்டங்களுக்கமைய ஒழுங்காக அமைத்துக்கொள்வதற்கு இக்கையேடு உதவியாக இருக்கும் என்றும் பிரதிப்பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிலாளர் விவகாரங்களுக்கான நிரந்தரக்குழு ஐக்கிய அரபு இராச்சிய தொழிலாளர் சமூகத்துக்கு வழிகாட்டும் வகையிலான செயலியை (App) வெளியிடப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் இக்கையேடு வௌியாகியுள்ளது.

தொழிலாளர்களுடைய உரிமைகளையும் சட்டத்தையும் பாதுகாக்க இக்கையேடு உதவியாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள பிரதிப்பணிப்பாளர், தொழிலாளர்கள் பொதுவாக மேற்கொள்ளும் சட்ட மீறலான தொழில் வழங்குநர் தவிர்ந்த ஏனையவர்களுடன் பணியாற்றுவதற்கு 50,000 திர்ஹம் அபராதமாக விதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வீசா காலம் முடிவடைந்த நிலையில் தங்கியிருந்த போதை பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனையும் போதை பொருள் தொடர்பான துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு நான்கு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

தலைமறைவாதல், வன்முறையில் ஈடுபடுதல், களவு, கொள்ளை, சட்டவிரோத மது பாவனை, பொய் வாக்குமூலம், சூதாட்டம் மற்றும் கலவரம் என்பவையும் தண்டனைக்குரிய குற்றங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளன என் அக்கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அக்கையேட்டில், வேலைத்தளங்களில் சுய பாதுகாப்பு குறித்து அவதானமாக இருப்பதன் அவசியம், பாதுகாப்பு கவசங்கள், உடைகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவம், செவிப்பாதுகாப்பு, தலைப்பாதுகாப்பு, தூசுப்பாதுகாப்பு, கண் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான காலணிகள் அணிதல் என பலவிடயங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் அவர்களுடைய வேலைநேரம், மேலதிக வேலைநேரம், சம்பளம், வைத்திய சலுகைகள், விடுமுறை, பொது விடுமுறை, சேவைக்கால நிறைவு நன்மைகள், தங்குமிட கொடுப்பனவு மற்றும் மேலதிக சலுகைகள் குறித்து அறிந்து வைத்திருப்பதற்கு இக்கையேடு உதவியாக இருக்கும் என்றும் பிரதிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435