மத்திய கிழக்கில் 50,000 தொழில்கள் இல்லாமல்போகும் அபாயம்!

கொவிட்-19 காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களில் 20,000 பேர் வேலை இழத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தற்போது வரையில் சில நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளமையினால், ஊழியர்கள் சம்பளத்தை இழக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் சிலருக்கு சம்பளம் குறைப்பு செய்யப்பட்டுள்ளது அல்லது சம்பளத்தை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிலருக்கு மேலதிக கொடுப்பனவுகள் இல்லாமல் போயுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் மேலதிக பொதுமுகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் தொழிலுக்காக வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருந்த சுமார் 30,000 பேருக்கு கொவிட்-19 காரணமாக தொழில் இல்லாமல் போவதாகவும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அவ்வாறான ஒரு பிரச்சினைக்கு முகம் கொடுத்திருப்பவராயின், அவர் சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்திற்கு அது குறித்து அறிவிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், குறித்த நாடுகளில் உள்ளவர்கள் அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் ஊடாக தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என குறிப்பிடுகின்றனர்.

தங்களுக்கு தொழில் இல்லாது போயுள்ளமையினால் தங்குமிடம் இல்லாது போயுள்ளதாகவும், உணவு கூட கிடைக்காமல் போயுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறான பணியாளர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கவோ அல்லது அவர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்து வருவதற்கோ எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435