தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் 3300 பேரை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் சித்தியடைந்தோரே இச்சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு அரச அலுவலகங்களில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.