சட்டவிரோத தொழில் முகவர்களுக்கு எதிராக 163 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைசசர் மனுஸ நாணயக்கார தெரிவித்துள்;ளார்.
சட்டவிரோதமான முறையில் பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முயற்சித்தமை, பண மோசடியில் ஈடுபட்;டமை என்பன தொடர்பில் தொழில் முகவர் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் 163 வழக்குகள் தாக்கல் செய்யபப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் தொடர்பில் சட்டத்தை மீறி செயற்படுவோருக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த 163 வழக்குகளில்; சீஸேல்ஸ் நாட்டில் தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட முகவர் நிறுவனம் ஒன்றுக்கு எதிராக மஹர நீதவான் நீதிமன்றில் 135 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இஸ்ரேல் தொழில்வாய்ப்பிற்காக அரசாங்கம் அனுமதித்துள்ள பணத்துக்கு அதிகமாக 19 பேரிடம் 5 கோடி ரூபாவிற்கும் அதிக பயணத்தை பெற்றுக்கொண்ட நிறுவனத்திற்கு எதிராக 19 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், மேலும் சில வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோத தொழில்வாய்ப்பு தொடர்பில் கடந்;த 2015 இல் 93 வழக்குகளும், 2016இல் 179 வழக்குகளும், 2017இல் 248 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஸ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.
எனவே, அது குறித்து உடன் அறிவிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.