சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்த சில வெளிநாட்டு ஊழியர்களை மெரினா பே குரூஸ் மையத்தில் உள்ள சொகுசுக் கப்பல்களில் தற்காலிகமாகத் தங்கவைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக சிங்கப்பூர் சுற்றுலா சபை நேற்று வெள்ளிக்கிழமை (மே 1) தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக ஊழியர்கள், சூப்பர்ஸ்டார் ஜெமினியில் (SuperStar Gemini) தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஊழியர்களை தற்காலிகமாக தங்க வைக்க அனுமதிக்கப்பட்ட இரண்டு கப்பல்களில் இதுவும் ஒன்று.
இரண்டாவது சொகுசு கப்பலான சூப்பர்ஸ்டார் அக்வாரிஸும் (SuperStar Aquarius) அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டு, ஊழியர்களை தங்க வைக்க தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் தங்கும் விடுதிகளுக்குள் வைரஸ் பரவுவதைக் குறைக்க மாற்று இடவசதிகளில் தங்கவைக்கப்படுவது அரசாங்கத்தின் நோய் தடுப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
சூப்பர்ஸ்டார் ஜெமினி மற்றும் சூப்பர்ஸ்டார் Aquarius-ஆகிய இரண்டு கப்பல்களிலும் சுமார் 2,000 ஊழியர்களை தங்க வைக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர்களை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சில சிறப்பு அம்சங்கள்:
புதிய காற்று கப்பலுக்குள் செலுத்தப்படுகிறது.
En suite கழிப்பறைகள் மற்றும் இன்-கேபின் டைனிங்
எல்லா நேரங்களிலும் பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகள் கவனிக்கப்படும்
கடுமையான தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
வைஃபை வசதி மற்றும் பொழுதுபோக்கு
சிங்கப்பூரில் நண்பகல் (மே 1) நிலவரப்படி, புதிதாக 932 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்த நபர்களின் எண்ணிக்கை 17,101ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மூலம் : sg.tamilmicset.com