மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 31.07.2018 வரையான காலப்பகுதியில் பாதுகாப்பு தங்குமிட விடுதிகளிலிருந்து ஆயிரத்து 826 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்வாய்புக்குச் சென்ற நிலையில், தமது பணியிடங்களில் பிரச்சினைகளை எதிர்நோக்கும் இலங்கை பணியாளர்கள் அந்த நாடுகளில் உள்ள உயர்ஸ்தானிகராயலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் பாதுகாப்பு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு விடுதிகளில் தங்கி இருப்பவர்களின் பிரச்சினைகளை விரைவில் தீர்க்கப்பட்டு அவர்களை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ ஆலோசனை வழங்கியுள்ளார் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பாதுகாப்பு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை இலங்கைக்கு அழைத்துவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்காயகம்ர தெரிவித்துள்ளார்.