
இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை காணொளி மற்றும் புகைப்படமாக சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த 27 யது நபரை அஜ்மான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனிநபர் உரிமையை மீறும் வகையில் குறித்த சம்பவத்தை புகைப்படம் மற்றும் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த உள்நாட்டு பிரஜைக்கு 6 மாதத்துக்கு சிறைத்தண்டனையும் 150,000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீடியோவில் எவ்வித உத்தியோகபூர்வ அனுமதியுமின்றி காயமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்பிலும் சண்டை தொடர்பிலும் விபரிக்கப்பட்டிருந்ததாக புலனாய்வுத்துறையின் பதில் பணிப்பாளர் மேஜர் மொஹம்மட் பின் யாபூர் அல் கப்லி தெரிவித்துள்ளார்.
வீதி போக்குவரத்து மற்றும் குற்றவியல் சம்பவங்களை புகைப்படம் மற்றும் காணொளியாக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.