இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வரிஏய்ப்பைத் தடுத்தல் தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையும், ஓமானும் கைச்சாத்திட்டுள்ளன.
15 ஆகஸ்ட் 2018 அன்று நடைபெற்ற சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மட்டத்திலான இரண்டாவது இலங்கை ஓமான் இருபக்க கலந்தாலோசனைகளின்போது இலங்கை மற்றும் ஓமான் அரசாங்கங்களுக்கிடையில் இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வரிஏய்ப்பைத் தடுத்தல் தொடர்பான உடன்படிக்கையொன்று சம்பந்தப்பட்ட தலைவர்களால் கைச்சாத்திடப்பட்டது.
இருபக்க ஆலோசனைக்கான இலங்கை தூதுக்குழு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பிரசாட் காரியவசம் மற்றும்; ஓமானின் தூதுக்குழு இராஜதந்திரத்திற்கான கீழ் செயலாளர் மற்றும் ஓமான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் முதுகலைத் திணைக்கள தலைவர் மஹ்மூத் அவாத் அல் ஹஸனினால் வழிநடாத்தப்பட்ன.
இந்தச் சந்திப்பின்போது, இலங்கை மற்றும் ஓமான் மேலும் உறுதியான உயர் இருபக்க அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மீள் உறுதிப்படுத்தின.
இக்கலந்தாலோசனைகள் 2014இல் மஸ்கட் நகரில் நடைபெற்ற முதலாவது இலங்கை ஓமான் இருபக்க அரசியல் கலந்தாலோசனைகளின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மீதான பரிசீலனை நடவடிக்கை மற்றும் இருபக்க ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் ஆகியவற்றை மையப்படுத்தியிருந்தன.
இரு தரப்பினரும் வர்த்தகம், வணிகம் ஆகியவற்றை ஸ்தாபிப்பததன்பால் உழைப்பதற்கும் மத்திய கிழக்குக்கான ஒரு வாயிலான ஓமானுக்கும் இந்து சமுத்திரத்தின் ஒரு கேந்திரமான இலங்கைக்குமிடையிலான கப்பல் தொடர்புகளை உருவாக்குவதற்கும் உடன்பட்டனர்.
வர்த்தகம், சுற்றுலா, குடிவரவு, குடியகழ்வு, ஊழியர் மற்றும் மனிதவள பயிற்றுவிப்பு, பாதுகாப்பு, விவசாயம், மேற்படிப்பு மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கு அவசியமான பரந்த விடயங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டன.
மேலும், மீன்பிடி, விளையாட்டுக்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு என்பன எதிர்காலத்தில் சாத்தியமான ஒத்துழைப்புக்கான துறைகளாக இனங்காணப்பட்டன.
அத்துடன், இலங்கை தேசிய வணிக அறை மற்றும் ஓமான் வணிக மற்றும் கைத்தொழில் அறை ஆகியவற்றுக்கிடையிலான இலங்கை – ஓமான் வணிக சபையொன்றை ஸ்தாபிப்பதற்கு உதவி புரிவதற்கும் உடன்பட்டனர்.
ஆரம்பத்தில் இரு தரப்பினரும் மேம்படுத்தல் மற்றும் பரஸ்பர முதலீட்டுக்கான பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உடன்பட்டதுடன், திறன் வாய்ந்த ஊழியர்களின் இலங்கையிலிருந்து ஓமானுக்கான நகர்வை இலகுவாக்குவதற்கு திறன் அபிவிருத்தி மற்றும் தகமைகளை அங்கீகரித்தல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இரு தரப்பினரும் பிராந்திய ரீதியான ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட பல்தரப்பு ரீதியான ஆர்வங்களை முன்னேற்றுவதன் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தியுள்ளனர்.