சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்டது

கொவிட்-19 பரவுவதைத் தடுக்கும் நோக்கில், சுங்கே காடுட்-டில் (Sungei Kadut) அமைந்துள்ள தங்கும் விடுதியாக மாற்றப்பட்ட தொழிற்சாலை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களிடையே சமீபத்தில் கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அரசிதழில் அறிவிப்பு செய்யப்படும் 19வது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி இதுவாகும்.

தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்த தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த தங்கும் விடுதியில் நேற்றைய (ஏப்ரல் 20) நிலவரப்படி, 174 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும், சிங்கப்பூரில் நேற்று (ஏப்ரல் 20) 1,426 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது, மொத்தம் 8,014ஆக உயர்ந்துள்ளது.

புதிய சம்பவங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி பெற்றவர்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றுவரை, வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் 6,075 வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களில், ஆறு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435