மலேசியா மற்றும் ஜேர்மன் முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகள், கோழி முட்டைகள் மற்றும் கோழிக்குஞ்சுகள் உள்ளிட்ட அது சார்ந்த உற்பத்திப் பொருட்களை தமது நாட்டு சந்தைகளில் தற்காலிகமாக தடை செய்ய குவைட் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
குறித்த நாடுகளின் விலங்கு பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் தொற்று உள்ள விலங்குகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குவைட் விவசாய மற்றும்p மீன்பிடித்துறை தொடர்பான அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, குவைட்டில் வசிப்பவர்கள், கோழியுடன் தொடர்புடைய உற்பத்திகளை நுகர்வுக்கு பெற்றுக்கொள்ளும்போது அவதானமாக இருக்கு வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.