கட்டாரில் தொழிலாளர்களுக்கான முக்கியமான சட்டத்தில் திருத்தம்

கட்டாரில் தொழிலாளர் சட்டத்தில் சில சில ஒழுங்குவிதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நியாயமான மற்றும் விரைவான தீர்வு கிடைக்கும் வகையில தொழிலாளர் சட்டத்தை மறுசீரைமைப்பு செய்திருப்பதாக கட்டார் இளவரசர் ஷெய்க் பின் ஹமாட் அல் தானியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு சட்ட இலக்கம் 14 மற்றும் 1990 ஆம் ஆண்டு சட்ட இலக்கம் 13 என்பனவற்றின்கீழான சட்டங்கள் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு 2017 சட்ட இலக்கம் 13இன் கீழ், பணியார்களின் நலன்புரிக்கு முக்கியத்துவமிக்க புதிய சட்டம் உள்வாங்கப்பட்டுள்ளது.

இதன்போது நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக அலுவல்கள் அமைச்சின்கீழ் பணியாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தொழிலாளர் சட்டப் பிரச்சினைகளைத் தீர்க்க குழு ( Labour Dispute Resolution Committee (LDRC)) ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக தொழில்தருநருக்கும், தொழிலாளருக்கும் இடையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதன்போது தொழில் திணைக்களத்திற்கு குறித்து முறைப்பாட்டை தாக்கல் செய்வதற்கு முன்னர் துயரங்களை எடுத்துரைப்பதற்கான குழுவிற்கு முறைப்பாட்டை சமர்ப்பித்து 7 நாட்களுக்கு காத்திருக்க வேண்டும்.

குறித்த 7 நாட்களுக்குள் பிரச்சினைக்கு தீர்வை வழங்கத் தவறும்பட்சத்தில் அந்த முறைப்பாடு 3 வேலை நாட்களுக்குள் தொழிலாளர் சட்டப் பிரச்சினைகளைத் தீர்க்க குழு (( Labour Dispute Resolution Committee (LDRC)) குழுவிற்கு அனுப்பப்படும்.

இதேநேரம், இந்த சட்டத்தின் ஒழுங்குவிதிகள் அல்லது சேவை ஒப்பந்தத்தின் ஒழுங்கு விதிகள் தொடர்பில் ஏற்படும் உந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வைப் பெற்றுக்கொடுக்க தெரிவுக் குழுவிற்கு தகைமை உள்ளது.
தொழிலாளர் சட்ட பிரச்சினையை தீர்ப்பதற்கான குழுவிடமுள்ள பிரச்சினையை வேறு எந்த நீதிமன்றத்திலும் ஏற்க முடியாது என்பதுடன், தற்போது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக இடம்பெறும் வழக்குகளுக்கு விசாரணைகளுக்காக இந்த நடைமுறை பொருந்தாது என இளவரசர் தெரிவித்துள்;ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435