UAE யில் புதிய டேட்டா வசதியை ஏற்படுத்தவுள்ள எடிசலாட்.

எடிசலாட் நிறுவனம் குறைந்த விலையில் 4GB இண்டர்நெட் பயன்படுத்தக்கூடிய வசதியை புதிதாக ஏற்படுத்தியுள்ளது.

அதற்கமைய நாளொன்று 1 GB டேட்டா வசதியை ஒரு திர்ஹம் செலவிடுவதனூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்புதிய டேட்டா திட்டமானது 24 மணித்தியாலத்தின் பின் மீண்டும் புதுப்பிக்கப்படும்.

முற்கொடுப்பனவு வசதிகளை பயன்படுத்தும் வாடிக்கைகயாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இச்சேவை வழங்கப்படவுள்ளது. ஒருவர் பல சந்தாக்களை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

உள்ளூர் பயன்பாட்டிற்கு மட்டுமே அனுமதியுள்ளதுடன் My Etisalat UAE செயலி அல்லது *101*11# இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதனூடாக இவ்வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.்

எப்போது வேண்டுமானாலும் தமது சந்தாவை ரத்து செய்யமுடியும் என்பதுடன் ரத்து செய்தால் மீண்டும் புதுப்பிக்கவும் முடியாது. மிகுதி டேட்டாவானது செல்லுபடியாகும் கால எல்லை வரையில் பயன்படுத்த முடியம்.

குறைந்த பணம் இருப்பின் தானியக்க மீள்புதுப்பித்தல் இடம்பெறாது. மீள் நிரப்பி சந்தாவை புதுப்பிப்பதற்கு 3 நாட்கள் வழங்கப்படும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435