பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் புதிய நடைமுறை ஒன்றை பின்பற்றுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் என்பவற்றுடன் நிதயமைச்சும் இணைந்து கலந்துரையாடி, அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நிதியமைச்சுடன் தாம் உள்ளிட்ட தொழிற்சங்கள் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்காரணமாக தீபாவளி தினத்தை அடுத்து இடம்பெறவிருந்த தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினை தொடர்பான போராட்டங்களையும் ஒத்தி வைத்துள்ளதாக ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.