கொரிய மொழிப் பரீட்சை பெறுபேறுகள் குறித்த அறிவித்தல்

மதிப்பீட்டின் அடிப்படையில் புள்ளி வழங்கும் முறைமைக்க அமைய, நடத்தப்படும் 3ஆவது கொரிய மொழி பரீட்சையில் உற்பத்தித் துறை சார்பான பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், தொழில்வாய்ப்பை எதிர்ப்பார்த்து காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பணியகத்தின் அந்த அறிவித்தலுக்கு அமைய, கொரிய மொழிப் பரீட்சை முன்னுரிமை Nசுhதனையின் இறுதிப் பெறுபேறுகள் 09.11.2018 அதாவது இன்றைய தினமோ அல்லது அதற்கு பின்னரான தினத்திலோ இலங்கை வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்துடன், பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர், நேர்முகப் பரீட்சை தொடர்பான தகவல்கள் 09.11.2018 அன்றோ அல்லது அதற்கு பின்னரான தினத்திலோ பணியகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்பதுடன், அந்தத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இணையத்தளத்தை பார்வையிடுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

முழுமையான தகவல்களை இந்த இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435