புத்தாண்டில் ​வௌிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கான நன்மை

பிறந்துள்ள புத்தாண்டில் வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நல்லாட்சி, நிலைத்தன்மையுடன் கூடிய நாடு என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைக்கமைய புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் திட்டம் அறிமுகப்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழியை புத்தாண்டில் நடைமுறைப்படுத்த இயலுமாகியுள்ளமை மகிழ்ச்சிக்குரியது.

புலம்பெயர் தொழிலாளர் தொடர்பில் வழங்கிய இரு உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி புலம்பெயர் ஊழியர் பாதுகாப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அத்திட்டம் தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அபிவிருத்தி ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுக்களை தொடர்ந்து வழங்குவதற்கு நாம் தயாராய் உள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ். வித்தானகே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஆர். கே. ஒபேசேக்கர, பொது முகாமையாளர் கே. ஒ.டீ.டீ பெர்ணாண்டோ, மேலதிக பொது முகாமையாளர் டப்ளியு.என். வன்சேக்கர ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

dgi

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435