ருயுநு இல் குற்றம் புரிந்தால் மில்லியன் த்ராம் அபராதத்துடன் சிறை
ஐக்கிய அரபு இராச்சியத்தில் குற்றவியல் தண்டனை சட்டக் கோவையின் இணையத்தள குற்றங்கள் தொடர்பான தண்டனை மற்றும் அபராத முறைமைகளை தற்போது கடுமையான முறையினில் நடைமுறைப்படுத்த அந்நாட்ட அரச அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை சிலர் மீறுவதன் காரணமாகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவராவது ஒருவர் சமூக வலைங்கள் தொடர்பில் நடைமுறையில் உள்ள சட்டங்களை மீறுவாராயின், அவருக்கு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைமையும், ஒரு மில்லியன் த்ராம் குறைந்தபட்ச அபராதம் செலுத்த நேரிடும் என்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு நினைவுபடுததப்படுகிறது.
இணையவளி குற்றத்தின் கீழ், சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பதிவேற்றம் செய்தல், பகிர்தல் முதலான குற்றங்களுக்காக சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் முதல் 250,000 மில்லியன் வரை அபராதம் செலுத்தவேண்டி ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.