இலங்கையிலிருந்து கத்தார் பயணிப்போருக்கான தகவல்கள்….

இலங்கை விமான நிலையத்தில் சமர்பிக்கவேண்டிய ஆவணங்கள்
1- PCR Test (Negative)
2-Exceptional Entry Permit
3-Ticket
4-Hotel Booking for Quarantine
5-Consent Form Filed

PCR Test எடுக்க அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலைகள்
1-Nawaloka Hospital
2-Lanka Hospital
3-Asiri Surgical
4-Durdans

நீங்கள் PCR எடுக்கவேண்டுமென்றால் உங்கள் Departure தினத்திற்கு 2 நாள் முன்பே PCR Test க்கான Smple கொடுக்கவேண்டும், அவ்வாறு கொடுத்தால் 24 மணித்தியாலத்தின் பின்பே உங்கள் Result கிடைக்கும் .

நீங்கள் நினைப்பது போன்று PCR Test சம்பந்தமாக பயப்பட வேண்டிய அவசியமில்லை, மூக்கினுள் பின்சுவர் வரைக்கும் அதை நுழைப்பார்கள் இதை நுழைப்பார்கள் என்பதெல்லாம் பொய்,

உங்கள் PCR இலிருந்து Copy ஒன்றுமெடுத்துக்கொள்ளுங்கள்.

கட்டாயமாக Online Check in ஆகிக்கொள்வது மிகவும் சிறந்தது.

5மணித்தியாலங்களுக்கு முன் 6 மணித்தியாலங்களுக்கு முன் Airport செல்லவேணுமென்ற அவசியமே இல்லை வழமைபோல் 3 மணித்தியால இடைவெளி வைத்துச்சென்றால் போதும்.
Aiport இல் வழமைக்குமாறாக வேறெந்த மாற்றமுமில்லை. இதனைத் தவிர Mask, Face protection, Social Distance

ஒரு Seat விட்டு ஒரு Seat க்கே நீங்கள் அமரமுடியும்.
வழமைபோல் சாப்பாடு வழமைபோல் கவனிப்பு. இம்முறை Cabin Crew முகங்களை  பார்க்கமுடியாது அவ்வளவுதான்.

Qatar_விமான நிலையத்திற்கு வந்திறங்கியதன் பின்..

1-உங்களிடம் Qatar Sim இருக்கவேண்டும் இல்லாவிட்டால் உடனே அவ்விடத்தில் வாங்கமுடியும் (QR 35)
2-EHTERAZ பண்ணவேண்டும்.
3-உங்கள் EHTERAZ Check செய்யப்படும்.
4-Entry permit check பண்ணி அதில் Red Label ஒட்டப்படும் (High risk country)
5-அதன்பின் வழமைபோல் Imigration
6-வழமைபோல் Baggage Collection
7- அதன்பின் நேரடியாக Hotel Booking Counter இல் உங்களுக்கான Hotel உறுதிசெய்யப்பட்டு உங்களுக்கான வாகனத்தில் அனுப்பிவைக்கப்படும்.
நண்பர்களோ உறவினர்களோ நம்மை பார்க்கவோ நம்மிடமுள்ள பொதிகளை பெற்றுக்கொள்ளவோ முடியாது, இது வழமைக்கு மாறான Exit வழியாக இருக்கும், நீங்கள் Hotel சொல்லும் வாகனத்தில் கூடுதலாக 3 பேர் மாத்திரமே கொண்டுசெல்லப்படும்.
Hotel இல் உங்கள் தரவுகளை எடுத்துவிட்டு உங்களுக்கான Room தரப்படும் Room இலிருந்து நீங்கள் வெளியே செல்லமுடியாது.
சரியாக 5 ஆவது நாள் மீண்டும் உங்களுக்கு PCR Test எடுக்கப்படும் 6ஆவது நாள் Result வரும் அதுவும் Negative என்றால் 7ஆவது நாள் Home Quarantine form நிரப்பி Sign வைத்துவிட்டு உங்கள் சொந்தச் செலவில் உங்கள் வீடு திரும்பமுடியும் அதன் பின் மீண்டும் 7நாட்கள் Quarantine இல் இருக்கவேண்டும்.

பின்னர் உங்கள் வேலையைத் தொடரமுடியும்.

 ஹரிப்பிரசாத் மாணிக்கராஜாவின் முகநூலில் இருந்து

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435