தற்போது கொரியாவில் அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் பணியாற்றிவருகின்றனர். அதேநேரம், கொரியாவில் பணியாற்றுவதற்காக விண்ணப்பிக்கும் இலங்கைளர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துவருகிறது.
கொரிய மொழி பரீட்சை மற்றும் திறன்கள் பரீட்சைகளில் தோற்றி பெருமளவான இலங்கையர்கள் தற்போது கொரியாவில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், கொரியாவில் தற்போது பணியாற்றும், எதிர்காலத்தில் கொரியாவில் பணியாற்ற எதிர்பார்த்திருக்கும் அனைவருக்கும் நல்ல செய்தி வெளியாகியுள்ளது.
2005 இல் வேலைவாய்ப்பு பரிமாற்றங்களின் அடிப்படையில கொரியாவின் குறைந்தபட்ச ஊதியம் 650000 தொகுதிகளை கடந்த தசாப்தத்தில் விரைவாக அதிகரித்துள்ளது, கொரிய வரலாற்றில் மிக அதிக சம்பள உயர்வு 2018 இல் 16.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, 2019 ஆம் ஆண்டின் சம்பள அதிகரிப்பு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 10.9 சதவீத அதிகரிப்பாக இருக்;கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019இற்கான சம்பள உயர்வு விவரம்
• அடிப்படை சம்பளம் மணித்தியாத்திற்கு – 8,350 வொன்
• மேலதிகநேர கொடுப்பனவு மணித்தியாலத்திற்கு – 12,525 வொன்
• மாதாந்த சம்பளம் (209 மணித்தியாலத்திற்கு) – 1, 745, 150 வொன்
• மாதாந்த சம்பளம் (226 மணித்தியாலத்திற்கு) – 1, 887, 100 வொன்
• இரவுநேர பணியாளர்களுக்கு மணியத்தியாலத்திற்கான கொடுப்பனவு – 4,175 வொன்
(ஓய்வு நேரம் இரவு 10.00 மணிமுதல் காலை 6.00 மணிவரை)