
ஊழியர் சேமலாப நிதியை (EPF) பயன்படுத்தி 2016 ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் பிணை முறி கொள்வனவின்போது, இடம்பெற்றுள்ள 8 கோடி ரூபா பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற விசாரணைகளின்போதே பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் இதனைத் தெரிவித்தள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.