ஓமான் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் 212 சுகாதார சேவைகளுக்கான கட்டணங்கள் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01ஆம் திகதியிலிருந்து அதிகரிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மருத்துவ பரிசோதனைக்காக அறவிடப்படும் கட்டணத்தில் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்தக் கட்டண அதிகரிப்பானது ஓமான் நாட்டவர்களுக்கு மட்டுமல்லாது, அங்கு பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.