ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் நேரத்தில் வெளியே செல்ல அனுமதி பெற்றிருப்பவர்களின் கவனத்திற்கு குவைத் உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குவைத் உள்துறை அமைச்சகம் ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்ல ஊரடங்கு அனுமதி பத்திரம் (Curfew Pass) பெற்றிருப்பவர்கள் தங்களது இருப்பிடம் /செல்லுமிடம் குறித்த துல்லியமான தகவல்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது..
ஊரடங்கு உத்தரவு உள்ள நேரத்தில் மருத்துவமனைகள் அல்லது கிளினிக்குகளில் மருத்துவர்களைப் பார்க்க விரும்பினால்:
https://curfew.paci.gov.kw, என்ற இணைய தளத்தில் மூலமாக பதிவு செய்து அனுமதி பெறலாம்.
அவ்வாறு செல்லும் நபர்கள் மருத்துவமனையில் அல்லது கிளினிக்கில் நீங்கள் பெற்ற அனுமதியை காட்ட வேண்டும், அவர்களின் மூலமாக உங்கள் அனுமதி தகவல்களைச் சரிபார்க்கப்படும்.
நீங்கள் பெற்ற ஊரடங்கு அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள இடம் குறித்த தகவல்கள் சரிபார்க்கும் போது பொருந்தவில்லை என்றால், நீங்கள் இனி வரும் காலங்களில் ஊரடங்கு அனுமதி பத்திரம் பெறுவதற்கு உங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, உரிய விசாரணைக்கு உட்படுத்தபடுவீர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு மட்டும் அல்ல ஊரடங்கு அனுமதி பத்திரம் வைத்திருக்கும் அனைவருக்கும் இது பொருந்தும், ஊரடங்கு அனுமதி பத்திரம் வைத்துக் கொண்டு பெரும்பாலான நபர்கள், அதில் (ஊரடங்கு அனுமதி பத்திரம்) குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு மட்டும் செல்லாமல் குவைத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருவதால் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
காவல்துறையினரின் சோதனையில் கண்டுபிடிக்கபட்டால், அபராதமும், உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.
மூலம் : KuwaitTamilSocialMedia