
சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்து, மத்துகம பகுதியில் உள்ள கைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய 49 இந்தியர்கள் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்து தொழில் ஈடுபட்டமை மற்றும் விசா அனுமதிப்பதிரம் காலவதியானமை முதலான காரணங்களின் அடிப்படையில் நேற்று முன்தினம் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேநேரம், கடந்த 25ஆம் திகதி இங்கிரியவில் உள்ள கைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய நிலையில் வைத்து 24 இந்தியர்கள் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த 49 இந்தியர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக கைதுசெய்யப்பட்ட 24 இந்தியர்களும், மிரிஹானயில் உள்ள தடுப்பு முகாமில் சில தினங்கள் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.