ஐக்கிய அரபு இராச்சிய கம்பனிகளில் தொழில்வாய்ப்புக்கள் உள்ளதாக போலி நியமனக்கடிதங்கள் இந்திய பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான டுபாய் தூதரகம் அறிவித்துள்ளது.
அதிகாரபூர்வமான அடையாளம் மற்றும் வேலைவாய்ப்பு சான்றிதழ்கள் உள்ளடக்கப்பட்டே போலி தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு குறைந்தது இரு தொழில்வாய்ப்புகள் தமக்கு அறியக்கிடைத்ததாக சுட்டிக்காட்டியுள்ள தூதரகம் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் அறிவித்துள்ளது.
போலி நியமனக்கடிதங்கள் கீழே தரப்பட்டுள்ளன
கலீஜ் டைம்ஸ்/ வேலைத்தளம்