சுகாதார அமைச்சர் ராஜித சேனராத்தினவிற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் நேற்று (13) கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டமானது பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பித்து 30 நிமிடங்கள் வரை முன்னெடுக்கப்பட்டது.
கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் ஒன்று கூடி நேற்று (13) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
தரமற்ற நீரிழிவு, புற்றுநோய் மருந்துகளை நிறுத்துக, ஔடத அதிகாரத்தை மருந்து மாபியாக்களிடம் ஒப்படைக்காதே, இலங்கை மருத்துவச்சங்கத்திற்குள் அரசியல் தலையீட்டை மேற்கொள்ளாதே, ராஜித்த வேண்டாம் போன்ற வசனங்களை எழுதிய பதாதைகளை தாங்கி இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ராஜித்த சேனாரத்னவின் குடியியல் உரிமையை இல்லாதொழிக்கவேண்டியது ஏன் என்றும் துண்டுபிரசுரம் வீதியில் செல்பவர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சுகாதார அமைச்சருக்கு எதிராக நேற்று பதுளையிலும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.