களுத்துறை பொது வைத்தியசாலைக்குள் புகுந்த குண்டர்கள் வைத்தியர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒரு வாரம் கடந்த நிலையில் இன்னமும் விசாரணைகள் மேற்கொள்ளவில்லையென்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சரின் அரசியல் ரீதியாக நெருக்கமானவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் அனைத்து குண்டர்களின் முழுமையான விபரங்களுடன் களுத்துறை பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று கடந்த 26ம் திகதி உதவிச் செயலாளர் டொக்டர் நவீன்த சொய்ஸா மீதும் மற்றும் களுத்துறை பொது வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் பொலிஸில் முறைப்பாடு செய்தபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.