மெக்ஸிக்கோ வளைகுடாவில் நிர்க்கதியான நிலையில் இலங்கையர்கள் உட்பட 65பேர்

மெக்ஸிக்கோ வளைகுடாவின் கடல் மார்க்கத்தில் நிர்க்கதியான நிலையிலிருந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளை சேர்ந்த 65 குடியேறிகள் அந்த நாட்டு காவற்துறையினரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குடியேறிகள் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி கட்டாரிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது அவர்கள் முதலில் துருக்கியை அடைந்துள்ள நிலையில் அதன் பின்னர்  தென் அஆப்பிரிக்கா மற்றும் கொலம்பியாவுக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் ஈக்வடோர், பனாமா மற்றும் கோத்தமாலா ஆகிய ராஜியங்களை கடந்து மெக்ஸிக்கோவை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அவர்கள் மெக்ஸிக்கோவுக்கு சென்றடைந்ததன் பின்னர் அங்குள்ள மனித கடத்தல் காரர்கள் அவர்களை அமெரிக்க எல்லைக்கு அழைத்து செல்வதாக குறித்த பகுதியில் கைவிட்டு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மெக்ஸிக்கோ ொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர்கள் பல நாட்களாக நீர் மற்றும் உணவு இன்றி தவித்து வந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளளன.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435