அவுஸ்திரேலியாவின் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளின் பிரகாரம், படகுகளின் ஊடாக சட்டவிரோதமாகப் பயணஞ்செய்பவர்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்வதற்கோ அல்லது தொழில் புரிவதற்கோ ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவுஸ்திரேலியா எச்சரித்திருக்கிறது.
கடல் மார்க்கமான சட்டவிரோத புலம்பெயர்தலைத் தடுக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கை தலைவர் மேஜர் ஜெனரால் கிரைக் புரூணி நேற்று நீர்கொழும்பு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது ஊடகவியாலாளரிடம் கருத்து தெரிவித்துள்ளபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
படகுமூலம் சட்டவிரோதமாக புலம்பெயர்வதனால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் நீண்டகால பின்விளைவுகள் குறித்து எச்சரிக்கை வழங்குவதற்கான முயற்சிகளில் இலங்கையர்கள் அனைவரும் தம்முடன் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத படகுமூல பயணம் என்பது அர்த்தமற்றதும் ஆபத்தானதும் எனும் அதேவேளை, தமது நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறுவதற்கான எவ்வித வாய்ப்புக்களும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.